முன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்…!

முன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்…!

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் முன்னாள் பொது செயலரான கோஃபி அன்னான் காலமானதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். காலமான கோஃபி அன்னானுக்கு வயது 80.

மனிதாபிமான பணிகள் தொடர்பாக கோஃபி அன்னான் நோபல் பரிசை பெற்றுள்ளார். 1997 முதல் 2006 வரை, இரண்டு முறைகள் அவர் ஐ.நா. பொது செயலர் பதவியில் இருந்துள்ளார். உலகின் முக்கிய பொறுப்பில் ஒன்றாக கருதப்படும் ஐ.நா. பொது செயலர் பதவியில் அமர்ந்த முதல் கறுப்பின நபர் என்ற பெருமையை பெற்ற கோஃபி அன்னான், ஆப்ரிக்காவில் கானா நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

தனது ஐ.நா. செயலாளர் பதவிக்காலத்துக்குபின், சிரியாவில் ஐ.நா. அமைப்பின் சார்பாக சிறப்பு தூதராக அவர் செயல்பட்டார். அந்த பிராந்தியத்தில் நடந்த மோதலுக்கு சுமூக மற்றும் அமைதி தீர்வு ஏற்பட தேவையான முயற்சிகளுக்கு அன்னான் தலைமையேற்றார். தீவிர எச்.ஐ. வி/எய்ட்ஸ் தொற்று பரவல் மற்றும் இராக் போர் நடந்த காலகட்டத்தில் கோஃபி அன்னான் ஐ.நா. செயலரராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.