வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் ஜியோவின் அதிரடி ஆஃபர்

பழைய டாங்கிள்களை கொடுத்து புதிய ஜியோ ஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு வைபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.ஒரே சமயத்தில் வைபை வசதி கொண்டு பத்து சாதனங்களிலும், ஒரு சாதனத்திற்கு யுஎஸ்பி மூலம் இணைத்து பயன்படுத்தும் வசதியை ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட் வழங்குகிறது.

சலுகையை பெற என்ன செய்ய வேண்டும்

# ஜியோ ஃபை போர்டபிள் வைபை ரவுட்டரை ரூ.999 செலுத்தி வாங்க வேண்டும்.
# ஜியோ பிரைம் சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்
# பழைய ஜியோ அல்லாத வேறு ஏதேனும் டாங்கிளை ஜியோ ஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் வழங்க வேண்டும்.
# புதிய ஜியோஃபை MSISDN நம்பரை பெற வேண்டும். பின்னர், ரூ.2,200 கேஷ்பேக் உடனடியாக மைஜியோ கணக்கில் சேர்க்கப்படும்.

# கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய மொத்தம் 44 வவுச்சர்களாக வழங்கப்படும். இவற்றை ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாம்.