சிறுவன் சுஜித் உயிரிழப்பு!மீட்புத் தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானம்-தொல்.திருமாவளவன்…!

சிறுவன் சுஜித் உயிரிழப்பு!மீட்புத் தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானம்-தொல்.திருமாவளவன்.

தேசிய பேரிடர் மேலாண்மை குழு, மாநில பேரிடர் மேலாண்மை குழு, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட ஏராளமான குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. சுஜித்தை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வகையிலான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சிறுவன் உயிரிழந்ததாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பலமணிநேரம் உயிருக்கு போராடிய சிறுவனைக் காப்பாற்ற நம்மிடையே உரிய மீட்புத் தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானமே ஆகும்.

சுஜித்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பெற்றோருக்கு ரூ ஒரு கோடி இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்ந்து கடந்த 5 நாட்களாக தீவிர மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்ட தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.