சுஜித் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல்…!

சுஜித் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல்…!

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான்..

அதற்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான். ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது.அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.