நெய்தல் நிலமக்களின் குரல் ஒருத்தரும் வரலே ஆவணப்படம் ..!

நெய்தல் நிலமக்களின் குரல் ‘ஒருத்தரும் வரலே’ ஆவணப்படம் ..!

ஒக்கி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் மனக்குமுறலை ஆவணப்படத்தின் மூலம் பதிவு செய்துள்ளார்.இயக்குனர் திவ்யபாரதி.

ஒக்கி புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு பணி, பேரிடர் மேலாண்மை, போன்ற அனைத்திலும் வெளிப்பட்ட அரசின் திட்டமிட்ட அலட்சியத்தால் 500க்கும் மேற்பட்ட தமிழக கேரள மீன்பிடி தொழிலாளர்கள் பலியாக்கப்பட்டார்கள். தமிழகம் மட்டுமின்றி இந்திய கடற்கரை முழுதும் வளர்ச்சி என்கிற பெயரால் சாகர் மாலா போன்ற அழிவு திட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக எவ்வாறு நம் கடல் வளத்தை சூறையாடுகிறார்கள், அதற்கு எதிராக தொடர்ந்து வீரியமுடன் போராடும் மீன்பிடி சமூகங்கள் எவ்வாறு கடற்கரையை விட்டு படிப்படியாக இடம்பெயர வைக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விரிவான பதிவை ஒருத்தரும் வரேல ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது