இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்…!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்…!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்திய அணியில் அஸ்வின், ரோகித் சர்மாவுக்கு பதில் ஹனுமா விஹாரி மற்றும் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.