ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்..!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்..!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், கோப்பையை வெல்லப் போவது யார் என, இந்தியா – வங்கேதசம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் முன்னேறின. சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் வெளியேறிவிட்டதால், இந்தியாவும், வங்கதேசமும் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன.

இதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சூப்பர்4 சுற்றில் கடும் சவாலை கொடுத்த வங்கதேச அணியை, இறுதிப் போட்டியில் இந்திய அணி வீழ்த்தி ஆசியக் கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.