அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன்!

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன்!

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் அறிவித்துள்ளார். 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜான்சன் 313 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி 153 ஒருநாள் போட்டிகளில் 239 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

ஆல்ரவுண்டரான மிட்செல் ஜான்சன் பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறந்து விளங்கியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதமும் 11 அரைசதங்களும் அடித்துள்ள ஜான்சன் அதிகபட்சமாக 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதேபோல் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச போட்டிகளில் இருந்து ஜான்சன் ஒய்வு பெற்றிருந்தாலும், உள்ளூர் டி20 மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்தார். இந்நிலையில், தற்போது உடல் ஒத்துழைக்காததால் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். அணிதான் எனக்கு முக்கியம். அதனாலேயே ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன் என்று கூறும் ஜான்சன் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றுவது குறித்து யோசிப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.