இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா 274 ரன்னுக்கு ஆட்டமிழப்பு..!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா 274 ரன்னுக்கு ஆட்டமிழப்பு..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி அசத்தல் சதமடித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அஸ்வின் சுழலில் சிக்கிய அந்த அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் விராக் கோஹ்லி நம்பிக்கை தந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கோஹ்லி சதம் விளாசினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 22வது சதம் இது. இங்கிலாந்தில் கோஹ்லி அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா 274 ரன்னுக்கு ஆட்டமிழப்பு.முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து.