ஐசிசி-யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் ராகுல் டிராவிட்..!

ஐசிசி-யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் ராகுல் டிராவிட்..!

ராகுல் டிராவிட் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ராகுல் டிராவிட் ஐசிசி யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைந்துள்ளார்.

Ricky-Ponting-Claire-Taylor-Rahul-Dravid

ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்தின் டப்லின் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் இங்கிலாந்தின் மகளிர் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிலைர் டெய்லர் ஆகியோர் ஐசிசி-யின் `ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணிக்காக 164 டெஸ்டுகள் மற்றும் 344 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட், டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில் 10,889 ரன்களும் அடித்துள்ளார்.கவுரமிக்க ஐசிசி-யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இடம்பிடித்துள்ள 5-வது இந்தியர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.முன்னதாக கபில்தேவ், அணில் கும்ப்ளே, சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் பேடி ஆகிய இந்திய வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.