புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப்பை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனால் 175 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ரோகித் சர்மா 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸர்களையும் அடித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். அதேசமயம் இந்திய அளவில் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.