கொல்கத்தா அணி அபார வெற்றி

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ரன்கள் அடித்தது ஷார்ட் 44 ரன்களும், ரஹானே 36 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். தினேஷ் கார்த்திக் 42 ரன்களும், ராணா 35 ரன்களும் எடுத்தனர்.