மும்பையை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியின் 9வது போட்டி நேற்று மும்பையில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7விக்கெட்டுக்களை இழந்து 194 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான யாதவ் மற்றும் லீவிஸ் முறையே 53 மற்றும் 48 ரன்களை அடித்தனர்.

இந்நிலையில் 195 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராய் 91 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்

கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என விளாசிய ராய், பின்னர் மூன்று பந்துகளில் ரன் ஏதும் அடிக்காததால் மேட்ச் டென்ஷன் ஆனது. ஆனால் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை அவர் அடித்ததால் டெல்லி அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.