இருமல் மற்றும் சளி குணமாக்கும் இயற்கை முறைகள் !!

நமக்கு சளி, இரும்பல் வந்துவிட்டால் இரவில் தூங்க முடியாமல் இரும்பிக்கொண்டே அவதிப்படுவதுண்டு. அதனை சரியாக்கும் இயறக்கை மருத்துவ முறைகளை காண்போம்.

Irumal Sali Marunthu

  • துளசியுடன் சிறிய இஞ்சி துண்டை சேர்த்து சிறிதளவு உப்பை தூவி மென்று தின்றால் இரும்பல் விரைவில் குணமாகும்.

 

  • தேன்யுடன் முருங்கை கீரை சாறு மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவ வலி குறையும்.

 

  • கருவேல மர கொழுந்தின் சாறை பிழிந்து வெந்நீரில் கலந்து குடித்து வர வறட்டு இருமல் சரியாகும்.

 

  • ஒரு டம்ளர் வெண்ணீருடன் இரண்டு ஸ்பூன் தேன் உடன் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் கழித்து அதை குடித்து வர இருமல், சளி குணமாகும்.

 

  • சிறிதளவு எலுமிச்சை சாறறை வெந்நீரில் விட்டு நன்கு கலக்கி சிறிது தேன்யுடன் குடித்தால் நெஞ்சு சளி கரையும்.

 

  • ஆரஞ்சு பழத்தையும், எலுமிச்சை பழத்தையும் சளியிருக்கும் காலந்களில் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி கரையும்.

 

  • பாலில் சிறிது மிளகுத்தூள், மஞ்சள் தூள் உடன் தேன் கலந்து குடித்து வர சளி கரையும்.

 

  • வெற்றிலைச் சாறுடன் இஞ்சிச் சாறையும் ஒன்றாகக் கலந்து குடித்து வர மார்பு சளி மற்றும் சுவாசக் கோளாறுகள் குணமாகும்.