நரைமுடியை கருமையாக்கும் இயற்கை மூலிகை வழிமுறைகள்!!

இன்றைய காலத்தில் பலருக்கு நரைமுடி என்பது சாதாரணமாக ஆகிவிட்டது. நமது முடியை கருப்பாக வைத்துக்கொள்ள மெலனின் என்னும் ஒரு வகை நிறமி தான் உதவுகிறது. இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி வருவதறக்கு இந்த மெலனின் குறைவதால் தான் காரணம் என்றும், வைட்டமின் பி 12 மற்றும் மரபணுக்கள் மூலமும் தான் வருகிறது.

Natural Herbal Remedies Way to Black Your Hair

இந்த நரைமுடியை எப்படி கருமையாக மாற்றும் இயற்கை முறையினை பார்ப்போம்!!.

  • நெல்லிக்காய் 250 கிராம்
  • மருதாணி இலை 50 கிராம்
  • வேப்பங்கொழுந்து 2 கிராம்

ஆகியவைகளை நல்லெண்ணெய் விட்டு அரைத்து கொள்ளவும்.

பின் 500 மில்லி தேங்காய் எண்ணெயுடன் கலந்து வெயிலில் ஒரு மாத காலம் காய வைக்கவும்.

ஒரு மாத காலத்திறகுள் இந்த மூலிகை தைலமாக மாறிவிடும்.

அதன்பின் தினமும் இதை தலையில் தேய்த்து வந்தால் நரை முடி நீங்கி கருப்பாக முடி வளரும்.